திருமணத்தை மீறிய உறவால் பெண்ணிடம் பணம், நகையை இழந்த மளிகைகடை வியாபாரி விபரீத முடிவு..!

0 3242

கள்ளக்குறிச்சி அருகே திருமண உறவை மீறிய தொடர்பால் பெண்ணிடம் பணம் மற்றும் நகையை இழந்த மளிகைகடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்வதற்கு முன்பாக, தற்கொலை குறித்து தனது மனைவிக்கு ஆடியோ பதிவிட்டுள்ளார்.

நைனார்பாளையத்தில் மளிகைக்கடை நடத்திவரும் ரமேஷிற்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ள நிலையில், ஏற்கனவே திருமணமான கோமதி என்பவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

கோமதிக்கு சிறிது சிறிதாக 23 லட்ச ரூபாய் பணம், 13 சவரன் நகைகளை ரமேஷ் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே கோமதிக்கு லோகநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், ரமேஷின் குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டதால் கோமதியை விட்டு விலகியதாக தெரிகிறது.

இந்நிலையில், கோமதிக்கு கொடுத்த பணம் மற்றும் நகையை ரமேஷ் திருப்பி கேட்டபோது, இதுவரை தன்னுடன் பழகியதற்கு அந்தப்பணம் சரியாகப் போய்விட்டது என்றதோடு, மேலும் 20 லட்சம் தரவில்லை என்றால் குழந்தைகளை ஏதாவது செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

தன்னை தற்கொலைக்கு தூண்டியது லோகநாதன், கோமதி, அவரது மகன் ஸ்ரீதர் ஆகியோர் தான் என்று ஆடியோவில் ரமேஷ் கூறியுள்ளதையடுத்து கோமதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments