17 வயது கல்லூரி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கடத்திய ரவுடி போக்சோவில் கைது..!

0 2042

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே  பிரபல ரவுடி ஒருவர், கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து கடத்திய நிலையில், மாணவியை மீட்ட போலீசார், ரவுடியின் தாய் மற்றும் உறவினர் பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த விஜிமோன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்காததால், விஜிமோன் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி தனது தாய், உறவினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து, கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை,  காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் தந்தை  குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததுடன், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் அளித்தார்.

முதலமைச்சர் தனிபிரிவு அலுவலக உத்தரவுப்படி, நேற்று மாணவியை மீட்ட குளச்சல் மகளிர் போலீசார், விஜிமோனின் தாயார் விஜி, உறவினர் பெண் சகாயராணி ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்ததுடன், தலைமறைவாக உள்ள விஜிமோனை 2-தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments