குடிநீர் தொட்டி திறப்பு விழாவில், ஆட்சியர் முன்பாக திமுக கவுன்சிலர் தலையில் அடித்த அமைச்சர் கே.என்.நேரு..!
திருச்சியில் குடிநீர் தொட்டி திறப்பு விழாவின் போது, அமைச்சர் கே.என்.நேரு, திமுக கவுன்சிலரை, குடம் முழுவதும் தண்ணீரை நிரப்பிக் கொடுக்கச் சொல்லி தலையில் தட்டி வேலை வாங்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பெரிய மிளகு பாறை பகுதியில் 50 ஆண்டுகளாக நீட்டித்து வந்த குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 95 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் தொட்டியை, கடந்த 6ம் தேதி அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
அந்நிகழ்வில் மக்களுக்கு இலவசமாக சில்வர் குடம் வழங்கப்பட்ட நிலையில், திமுக கவுன்சிலரான புஷ்பராஜ், சில்வர் குடங்களை வாங்கி தண்ணீர் நிரப்பிக் கொடுக்க, அமைச்சர் அதனை விநியோகித்தார்.
அப்போது குடம் முழுவதும் தண்ணீரை நிரப்பிக் கொடுக்கச் சொல்லி அமைச்சர், திமுக கவுன்சிலரின் தலையில் தட்டியதை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
Comments