வீடு கட்டுவதற்கு அனுமதி தரவில்லை என கூறி, வட்டாட்சியர் முன்பு கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி..!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி தரவில்லை என கூறி, வட்டாட்சியர் முன்பு கூலி தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் .
புளியங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பல முறை ஊராட்சி மன்றத்தில் அனுமதி கேட்டும் தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து தலைவாசல் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற மணிகண்டன், வட்டாட்சியர் முன்பு கையில் மறைத்து வைத்து இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Comments