ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்திவந்த 6 பேர் கைது..!

0 1362

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த 37 வயதான நபர்  உள்ளிட்ட 6 பேரை கைதுசெய்தனர்.

ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 6 பேர் பேண்ட் பாக்கெட்டுகள், உள்ளாடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து  3.54 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments