54 பயணிகளை ஏற்றிக் கொள்ளாமல் டெல்லி புறப்பட்டு சென்ற தனியார் விமானம்

0 2397

பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் go first விமானம் 54 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை go first விமானம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. ஆனால் இந்த விமானம் போர்டிங் பாஸ்களுடன் விமான நிலையத்தில் காத்திருந்த 54 பேர் இல்லாமல் அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து பயணிகள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் அலுவலகம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரை டேக் செய்து புகார் தெரிவித்தனர்.

மேலும் பெங்களூரு விமான நிலையத்தில் குழப்பம் நிலவுவதாகக் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments