பள்ளி முடிந்து வீடு செல்ல ஆட்டோவிற்கு காத்திருந்த 3 மாணவர்களை ஏமாற்றி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று தவிக்கவிட்ட நபர்..!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பள்ளி முடிந்து வீடு செல்ல ஆட்டோவிற்கு காத்திருந்த 3 மாணவர்களை ஏமாற்றி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று கொடைரோட்டில் தவிக்கவிட்டு சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 3 மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்ததும் ஆட்டோவிற்கு காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆட்டோ வரும் வரை ஊர் சுற்றிக் காட்டுவதாக கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.
அதிக தூரம் சென்றதால் சந்தேகமடைந்த மாணவர்கள் அழுததால், திண்டுக்கல் - மதுரை சாலையில் விட்டுச் சென்றுள்ளார்.
Comments