பி.எஸ்.3 ரக பெட்ரோல், பி.எஸ்.4 டீசல் கார்களுக்கு வெள்ளிக்கிழமை வரை டெல்லி அரசு தடை..!

0 694

காற்றின் தரம் மோசமடைந்ததன் காரணமாக, டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை வரை பி.எஸ்.3 ரக பெட்ரோல், பி.எஸ்.4 ரக டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வெப்ப நிலை, குறைந்த வேகத்திலான காற்று போன்ற சாதகமற்ற வானிலையால், டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததால், காற்று தர மேலாண்மை ஆணையம் மாசுக்கட்டுப்பாட்டுத் தடைகளை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் குறிப்பிட்ட வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாகவும், காற்றின் தரம் மேம்பட்டால் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாகவே, தடை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments