நீர்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதா.? என தடயவியல் ஆய்வு - தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர்..!

0 883

புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கலக்கப்பட்டது மனித கழிவுகளா அல்லது விலங்குகளின் கழிவுகளா என்பதை அறிய மாதிரிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹால்டர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், சம்பவம் நடைபெற்ற நேரத்தில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு அருகே உபயோகத்தில் இருந்த செல்போன் எண்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments