விஜய்யின் வாரிசு படத்தில் சூர்யவம்சத்தின் சாயலா..? சரத்குமார் என்ன சொல்கிறார்..! அட்லி பாணியில் அசால்ட் பதில்..

0 3286

வாரிசு திரைப்படத்தில் சூர்யவம்சத்தின் சாயல் இருக்கத்தான் செய்யும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

வாரிசு படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ள நிலையில் சரத்குமாரின் சூர்யவம்சம் படத்தின் போஸ்டருடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகர் சரத்குமார், ஸ்வரங்கள் 7 தான், அதற்குள் தான் டியூன் போட முடியும், புதுசாக ஒரு டியூனை கண்டுபிடிக்க முடியாது என்று அட்லி பாணியில் பதில் அளித்த சரத்குமார், படங்களில் இது போல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது, அந்த படத்தில் வந்தது போலவே இந்த படமும் இருக்கு என்றும் சொல்ல வாய்ப்புள்ளது, அதுவும் நான் நடித்திருப்பதால், அந்த படத்தோட பாதிப்பு இருக்குமோ என்று நினைக்கலாம், ஆனாலும் அந்த பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும், இந்தப்படம் பார்த்த மாதிரியே இருக்கேன்னு கூட நினைக்கலாம் என்று சரத்குமார் கூறி உள்ளார்.

வாரிசு படத்தின் ஆடியோ விழாவில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் விஜய் என்று தில்ராஜு கூறியது சர்ச்சையானது குறித்த கேள்விக்கு, தயாரிப்பாளர் தில்ராஜு எதார்த்தமாக சொன்னதை, மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக சரத்குமார் விளக்கம் அளித்தார். ஏற்கனவே விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்துவிட்டு அஜீத்தும் சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் சமாளித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடலூரில் உள்ள நியூ சினிமா என்ற தியேட்டரில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்திற்கு 11ந் தேதி அதிகாலை 4 மணி காட்சிக்கான டிக்கெட் வாங்குவதற்கு 3 மணி நேரமாக காத்துக்கிடந்த விஜய் ரசிகர் ஒருவர், 750 ரூபாய்க்கு கவுண்டரிலேயே டிக்கெட் விற்கப்பட்டதால், தினக்கூலியான தன்னால் வாங்க இயலவில்லை என்று வேதனை தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments