பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்த மேக்கப் கொள்ளையனை ஜெயிலுக்கு பேக்கப் செய்த போலீஸ்..! மாறு வேடம் போட்டும் பயனில்லை

0 1351

சென்னையில் வழக்கறிஞர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து  நகை மற்றும் பணம் பறித்துச்சென்ற சினிமா மேக்கப் மேனை போலீசார் கைது செய்தனர். போலீசில் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து மாறுவேடத்தில் வலம் வந்தவர் சிக்கிய பின்னணி..

விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வழக்கறிஞர் முருகன்.இவரது மனைவி சரோஜா.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, பள்ளியில் இருந்த தனது மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய சரோஜா, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் மறைந்திருந்த கொள்ளையன் சரோஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து வைத்து மிரட்டி வீட்டில் இருந்த மூன்று பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கொள்ளையனை தேடி வந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு தொடங்கி 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் வடபழனியில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த கொள்ளையன் ஆனந்த் என்பவனை கைது செய்தனர்.

விசாரணையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்த் 2016 ஆம் ஆண்டு சினிமாவய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழு நடனம் ஆடும் மங்கையருக்கும், டிவி சீரியலில் துணை நடிகர் நடிகைகளுக்கும் மேக்கப் போடும் வேலை செய்து வந்துள்ளார்.

போதைக்கு அடிமையான ஆனந்த் தொழிலில் கவனம் செலுத்தாததால் போதிய பணி கிடைக்கவில்லை என்றுகூறப்படுகின்றது.

பணத்தேவைக்காககொள்ளையடித்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டு 2 நாட்களாக வழக்கறிஞரின் மனைவி வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்வதை பின் தொடர்ந்து சென்று நோட்டமிட்டுள்ளான் வழக்கறிஞர்கள் வீட்டில் அதிகமாக பணம் இருக்கும் என்ற நம்பிக்கையில் வழக்கறிஞர் முருகன் வீட்டில் உள்ளே நுழைந்து நகை பணத்தை கொள்ளை அடித்ததாகவும் திருடி கொண்டிருக்கும் போதே அவரது மனைவி வந்ததால் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொள்ளைக்குறித்த செய்தியில் சிசிடிவி காட்சிகள் வெளியானதை தெரிந்து கொண்ட ஆனந்த், போலீஸிடம் சிக்காமல் இருக்க தனது மேக்கப் திறமை மூலம் மாறுவேடத்தில் திரிவதற்கு வசதியாக மொட்டை அடித்துக் கொண்டு முக அமைப்புகளை மாற்றி மாறுவேடத்தில் இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார் கண்களில் இருந்து தப்ப மொட்டை அடித்து மாறுவேடம் போடாலும், சிசிடிவி கண்களில் சிக்கியதால் பதுங்கி இருந்த கொள்ளையன் தங்களிடம் வசமாக சிக்கிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments