சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத... என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாத.. ஒரு வாழைப்பழம் அது வேணாமா ? பொங்கல் விழாவில் ருசிக்காதகரம்..

0 1969

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடந்த சமத்துவபொங்கல் விழாவில்  பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே. மணி எம்.எல்.ஏ கொடுத்த வாழைப்பழங்களை சாப்பிடாமல் மாடுகள் அடம் பிடித்த சம்பவம்..

பென்னாகரம் பா.ம.க சார்பில் , இயற்கைக்கு நன்றி சொல்லுவோம்.. கால்நடைகளுக்கு நன்றி சொல்லுவோம் .. மழைக்கு நன்றி சொல்லுவோம் என உற்சாகமாக கொண்டாடப்பட்டது சமத்துவ பொங்கல் விழா

பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதும், அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு ஜிகே மணி வாழைப்பழங்களை வழங்கினார், ஆனால் அந்த மாடு வாயை திறக்க மறுத்தது.

அருகில் நின்ற தொண்டர், அந்த மாட்டின் வாயை திறக்க வைத்து, பழத்தை வாயில் திணிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த மாடு தான் இப்படி என்றால், வேறு ஒரு மாட்டிற்கு வாழைப் பழத்தை உரித்து வழங்கினார் ஜி.கே. மணி. அதுவும் வாய் திறக்க மறுத்தது.

மனம் தளராத ஜி.கே மணியோ , அருகில் நின்ற மற்றொரு மாட்டிற்கு வாழைப்பழைத்தை ஊட்டிவிட முயன்றார். சொல்லி வைத்தாற் போல அந்த மாடும் பழத்தை பார்த்தும் வாய் திறக்கவில்லை.

அந்த மாடுகள் ஏற்கனவே நன்றாக சாப்பிட்டு விட்டதால், வாழைப்பழத்தை சாப்பிடவில்லை என கூறப்பட்டது. முன்னதாக இந்த விழாவில் தமிழர்களின் தற்காப்பு கலைகளுடன் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments