3 ஆண்டுகளுக்குப்பின் தாய்லாந்து வந்த சீன சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

ஆண்டுகளுக்குப்பின் தாய்லாந்து வந்துள்ள சீன சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, சீனர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டது.
சுவர்ணபூமி விமான நிலையம் வந்திறங்கிய சீன பயணிகள் 269 பேருக்கு மாலைகள், நினைவு பரிசுகளை வழங்கி, தாய்லாந்து சுகாதரத்துறை அமைச்சர் வரவேற்றார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களும் தாய்லாந்து வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Comments