ஜாமீனில் வெளிவந்து கூட்டு சேர்ந்து இருசக்கர வாகனம் திருட்டு... 5 பேர் கைது

சேலத்தில், ஜாமீனில் வெளிவந்து கூட்டு சேர்ந்து விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம், ஜங்ஷன் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதன்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, ஓமலூரை சேர்ந்த சுரேஷ் மற்றும் கூட்டாளிகள் மாசிலாமணி, தாஸ்குமார், ஜெகன் குமார், பார்த்திபன் ஆகியோரை கைது செய்து 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரும் ஜாமீனில் வெளிவந்து இருசக்கர வாகனங்களை திருடி சொற்ப பணத்திற்கு விற்று செலவழித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது
Comments