மதுரையில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து.. வேட்டி- சேலை பண்டல்கள் எரிந்து நாசம்

0 1471

மதுரையில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள இலவச வேட்டி சேலை தீயில் எரிந்து நாசம் ஆனது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு மதுரை மாவட்டம் முழுவதற்கும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகள் மூலம் இலவச வேட்டி சேலை வழங்குவதற்காக பல லட்ச ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் இலவச வேஷ்டி சேலைகள் கொள்முதல் செய்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு திடிரென தீ பிடித்து எரியத் துவங்கியது. இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் அலுவலக காவலாளி உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 20-க்கும் மேற்பட்டோர் 4மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்து குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments