இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

0 1096

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இது தொடங்க உள்ளது.

இதற்காக சட்டப்பேரவைக்கு வருகை தரும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் பேரவைச் செயலாளர் ஆகியோர் வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிக்க உள்ளார். அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.

காகிதம் இல்லாத உரை என்பதால் கணினி திரையில் வரும் உரையை ஆளுநரும், சபாநாயகரும் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்பின்னர்  நடைபெறும் அலுவல் ஆய்வுக்கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தினை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments