பசிபிக் தீவு நாடான வானூட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

0 1483

பசிபிக் தீவு நாடான வானூட்டில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 

போர்ட்-ஓர்லி கிராமத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியிருந்தது.

பூமிக்கடியே  27 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் சேதமோ அல்லது உயிர் பலியோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments