எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு..!

0 1768

தங்களின் கோரிக்கை மீது அரசு மனது வைத்தாலும், அதிகாரிகள் நிறைவேற்ற மறுப்பதாக,கொரோனா கால தற்காலிக ஒப்பந்த செவிலியர் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.

பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தி வந்த செவிலியர் சங்கத்தினருடன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அச்சங்கத்தினர் பேட்டியளித்தனர்.

அப்போது, கோரிக்கையை அரசு ஏற்காதபட்சத்தில், தங்களது குடும்பத்தினர் மற்றும் அனைத்து சங்கங்களுடன் இணைந்து கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments