அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச பட்ட திருவிழா.. 68 நாடுகளைச் சேர்ந்த 125 பட்டம் விடுபவர்கள் பங்கேற்பு..!

குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி நதிக்கரையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியுள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 அமைப்பின் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் இவ்விழாவை,முதலமைச்சர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார்.
வரும் 14ஆம் தேதி வரை நடைபெறும் பட்டம் விடும் விழாவில், 68 நாடுகளைச் சேர்ந்த 125 பட்டம் விடுபவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் தவிர, இந்தியாவின் 14 மாநிலங்களில் இருந்தும் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
Comments