பைக் மோதியதில் பேருந்து முழுமையாக தீப்பிடித்து எரிந்து சேதம்.. ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழப்பு..!

கிருஷ்ணகிரி அருகே, இருசக்கர வாகனம் மீது கர்நாடக மாநில அரசுப்பேருந்து மோதியதில், ராணுவ வீரர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஓசூர் அருகிலுள்ள ஒட்டுரைச்சேர்ந்த ராணுவ வீரர் சுந்தரேசன், தனது நண்பர் கணேசனுடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி அருகே சிக்காரிமேடு வளைவில் வலது புறமாக திரும்பி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திருவண்ணாமலை நோக்கி வந்த பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், பேருந்தின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் சாலையில் உராய்ந்ததால் ஏற்பட்ட தீப்பொறியில், பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பேருந்து பயணிகள் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர்.
விபத்தினால் கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
Comments