ஈரோடு அருகே உணவகத்தின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசி தாக்குதல்!

ஈரோடு அருகே,த்தின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபரை சிசிடிவி காட்சியைக்கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
நசியனூர் அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜூனன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு அருகில், மற்றொரு உணவகம் நடத்தி வரும் கோவேந்திரன் என்பவருக்கும், அர்ஜூனனுக்கும் இடையே தொழில்போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் அர்ஜூனின் கடைக்கு வந்த மர்ம நபர், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியதில், கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தாக்குதல் நடத்திய நபர் யார்? என சிசிடிவியில் தெளிவாக தெரியாத நிலையில், கோவேந்திரன் தாக்குதல் நடத்தியதாக, அர்ஜூனன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments