வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உள்ளே புகுந்த 10 அடி நீள ராஜநாகம்

0 1630

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரினுள் புகுந்த, 10 அடி நீளமும், 30 கிலோ எடையும் கொண்ட  ராஜநாகத்தை, வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். 

பாலக்குழி பகுதியை சேர்ந்த குஞ்சுமோன் தனது காரை வீட்டின் வளாகத்தில் நிறுத்தி இருந்தார்.

காரின் கதவு திறந்திருந்த நிலையில், நேற்றிரவு உட்புறத்தில் இருந்து திடீரென சத்தம் கேட்டதால், அவர் வெளியே வந்து பார்த்த போது, காரின் உள்ளே ராஜநாகம் ஒன்று இருந்துள்ளது. 

குஞ்சுமோன் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை அடுத்து பாம்பு மீட்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments