வளர்ப்பு மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் ரவுடியை ஓட ஓட விரட்டிக் கொன்ற காதலன்

0 2769

புதுச்சேரி அருகே வளர்ப்பு மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ரவுடியை ஓட ஓட விரட்டிக் கொன்ற காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜாவை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக  அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ், தினேஷ், மணிகண்டன், தங்கமணி ஆகிய நான்கு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், ராஜாவின் வளர்ப்பு மகளை பிரகாஷ் காதலித்து வந்ததும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் ராஜா கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments