பஞ்சாபில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் பவுஜாசிங் சராரி ராஜினாமா

பஞ்சாப் மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் பவுஜாசிங் சராரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஓய்வு பெற்ற காவலரான சராரி, பெரோஸ்பூரில் உள்ள குரு ஹர் சகாய் தொகுதியில் இருந்து பஞ்சாப் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதலமைச்சர் பகவான்சிங் அமைச்சரவையில் தோட்டக்கலைத்துறை அமைச்சராக இருந்த அவர், ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் கேட்டதாகக் கூறப்படும் ஆடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக சராரி தெரிவித்துள்ளார்.
Comments