காலாவதியான சட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - பிரதமர் மோடி

சுதந்திரம் அடைந்ததில் இருந்து காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டின் நிறைவுநாளில் பேசிய அவர், வளர்ந்த இந்தியாவை உருவாக்க, உள்கட்டமைப்பு, முதலீடு, புதுமை மற்றும் உள்ளடக்கம் ஆகிய நான்கு தூண்களில் நாடு கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர உலகமே இந்தியாவை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Comments