பாழடைந்த வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 டன் கொக்கைன் பறிமுதல்

தென் அமெரிக்க நாடான பெருவில், பாழடைந்த வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 டன் எடை கொண்ட கொக்கைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கலாவ் துறைமுக நகரத்தில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டின் தரைத்தளத்தில் கீழ் மூட்டை மூட்டையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை, தரையை உடைத்து எறிந்து போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Comments