சபரிமலை கோயிலுக்குச் செல்ல மாமூல் கேட்டு தர மறுத்த பாஜக பிரமுகரின் டிபன் கடையை அடித்து உடைத்த திமுக நிர்வாகிகள்..

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்கு 500 ரூபாய் மாமூல் தர மறுத்த பாஜக பிரமுகரின் டிபன் கடையை அடித்து உடைத்ததாக திமுக நிர்வாகிகள் 2 பேரை சென்னை கோயம்பேடு போலீஸார் கைது செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்கு 500 ரூபாய் மாமூல் தர மறுத்த பாஜக பிரமுகரின் டிபன் கடையை அடித்து உடைத்ததாக திமுக நிர்வாகிகள் 2 பேரை சென்னை கோயம்பேடு போலீஸார் கைது செய்தனர்.
கோயம்பேட்டைச் சேர்ந்த தேவேந்திரன் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததோடு, மார்க்கெட் பகுதியில் இரவு நேர தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் திமுக நிர்வாகியான விஸ்வநாதன், முத்து ஆகியோர் கேட்ட மாமூல் தொகையை விட குறைவாகத் தான் தர முடியுமென தேவேந்திரன் கூறியதால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், சபரிமலைக்குச் சென்று விட்டு திரும்பிய இருவரும் தங்களது கூட்டாளிகளுடன் சென்று தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. தேவேந்திரன் அளித்த புகாரைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Comments