என்எல்சிக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் ஏன் போராடவில்லை? : அன்புமணி கேள்வி

கோவை மாவட்டத்தில் தொழில் பூங்காவிற்காக ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜக, அதிமுகவினர் கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் என்எல்சிக்கு எதிராக ஏன் போராடவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் என்எல்சி நிறுவனம் தனது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்டத்தில் 49 கிராமங்களிலிருந்து விளை நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அன்புமணி வானதிராயபுரத்திலிருந்து நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அன்புமணி, என்எல்சி நிர்வாகம் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஒரு பிடி மண்ணைக் கூட தர மாட்டோம் என்றார்.
Comments