நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 'பபாசி'யின் 46வது புத்தக காட்சி.. 1000 அரங்குகளில் விற்பனைக்கு உள்ள ஏராளமான புத்தகங்கள்..!

0 1025

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தககாட்சியில், ஏராளமானோர் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

ஆயிரம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள புத்தக காட்சியில் மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான புத்தக அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 'கூண்டுக்குள் வானம்' என்னும் தலைப்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர் என்ற வாசகத்துடன் இருக்கும் அரங்கு எண் 286இல் பொதுமக்கள் புத்தகங்களை தானமாக வழங்கலாம்.

ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தக காட்சியில், அனைத்து வகையான புத்தகங்களின் விலையிலும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments