ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ திருவிழா.. சாதம், கறி குழம்பு என பத்தாயிரம் பேருக்கு கறி விருந்து..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அன்னதான திருவிழாவில், 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
அனுப்பப்பட்டி கிராமத்திலுள்ள கரும்பாறை முத்தையா கோயிலில் மார்கழி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழா நெடுங்காலமாக நடைபெற்றுவருகிறது.
முத்தையா சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, கோயிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 60 ஆடுகளை பலியிட்டு கறி குழம்பு சமைக்கப்பட்டது.
50 மூடை அரிசியில் சாதம் வடிக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
Comments