புளியந்தோப்பில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்னொரு ரவுடி கும்பலை சேர்ந்த 2 பேர் கைது..!

சென்னை புளியந்தோப்பில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்னொரு ரவுடி கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்து, மேலும் ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாஸ்நகரை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற ரவுடியுடன் ரவுடி மனோவுக்கு முன்விரோதம் இருந்த நிலையில், மனோவின் உறவினரை திருநாவுக்கரசு கோஷ்டியை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்ட மனோவை, அவரது மனைவியின் கண்முன்னே எட்டு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி சாய்த்துள்ளது.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மனோ மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments