சிற்பி திட்டத்தின் கீழ் இணைந்துள்ள மாணவர்களுக்கு யோகா பயிற்சியை துவக்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1213

சிற்பி திட்டத்தின் கீழ் இணைந்துள்ள ஐந்தாயிரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் யோகா பயிற்சி வகுப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தனர்.

அமைச்சர் மற்றும் மாநகர காவல் ஆணையர் இருவரும் கரணி உட்பட கடினமான யோகாசனங்களை செய்து காட்சி பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

ஒரே நேரத்தில் அதிக நபர்கள் நிகழ்த்திய இந்த யோகா பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி, உலக இளம் சாதனையாளர்கள் புத்தகம், தமிழ்நாடு இளம் சாதனையாளர்கள் புத்தகம் மற்றும் வேர்ல்ட் ரெகார்ட் யூனியன் புத்தகம் என மூன்று சாதனை புத்தகங்களில் இடம் பெற்றது.


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்தியாவில் உள்ள மாநகரங்களில் மகளிர் பாதுகாப்புடன் வாழும் இடங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments