உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்..!

0 10302

உலகம் முழுவதும் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்கள், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பு பிரார்த்தனையுடன் கொண்டாடினர்.

பெத்லஹேமில் உள்ள கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் நேட்டிவிட்டி தேவாலயத்தில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்கள் கூடி நள்ளிரவு பிரார்த்தனை மேற்கொண்டனர். பிரார்த்தனையில், பாலஸ்தீனிய அதிபர் Mahmoud Abbas மற்றும் பிரதமர் Mohammad Shtayyeh உள்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோல், ரஷ்யாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், கதீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். ரஷ்ய அரசியல் பிரமுகர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ பிரார்த்தனையில் பங்கேற்றதாக தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments