அமெரிக்காவில் பள்ளி வகுப்பறையில், ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன் கைது..!

அமெரிக்காவில் பள்ளி வகுப்பறையில், ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
விர்ஜினியா மாநிலத்திலுள்ள, ரிக்னெக் ஆரம்ப பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுவன், வகுப்பறையில் வாக்குவாதம் ஏற்பட்டபோது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஆசிரியையை நோக்கி ஒரு முறை சுட்டான்.
இதில் படுகாயமடைந்த ஆசிரியை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சிறுவனை பிடித்து, துப்பாக்கி கிடைத்தது எப்படி என விசாரணை நடத்திவரும் போலீசார் அவன் தெரிந்தே துப்பாக்கியால் சுட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அதிர்ஷ்டவசமாக வகுப்பறையிலிருந்த மற்ற மாணவர்கள் யாரும் இதில் காயமடையவில்லை.
Comments