ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பூக்கடை காவல் நிலையம்.. நேரில் சென்று பார்வையிட்ட நடிகர் பிரபு

0 10723

நடிகர் பிரபு, சமீபத்தில் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற சென்னை பூக்கடை காவல் நிலையத்தை பார்வையிட்டார்.

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பூக்கடை காவல் நிலையத்துக்கு இந்திய தர கவுன்சில்- இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக சர்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழான ஐஎஸ்ஓ 9001  வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.

இந்த காவல் நிலையம் குறித்து தகவலறிந்த நடிகர் பிரபு பூக்கடை வழியாக படப்பிடிப்புக் காட்சிக்கு சென்ற போது பூக்கடை காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார். பழமையான கட்டிடங்கள் மீதான ஆர்வத்தால் நேரில் வந்து பார்வையிட்டதாக நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments