உ.பி.யில் 2026 மகா கும்பமேளாவுக்கு 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

0 1674

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2026ம் ஆண்டு நடக்க உள்ள மகா கும்பமேளாவுக்கு 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரம் கோடி செலவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளாவுக்காக பட்ஜெட்டில் 6 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக 2019ம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் 24 கோடி பக்தர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments