வீதி வீதியாக சென்று கஞ்சா ரைடு வைத்த போலீஸ் எஸ்.பி..! நடந்து சென்று விசாரணை

0 2355
வீதி வீதியாக சென்று கஞ்சா ரைடு வைத்த போலீஸ் எஸ்.பி..! நடந்து சென்று விசாரணை

தூத்துக்குடியில் கஞ்சா போதையால் நிகழும் குற்றங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இரவில் வீதி வீதியாக ரோந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை காரணமாக பல்வேறு இளம் சிறார்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த 77 கொலைகளில், சுமார் 40க்கும் மேற்பட்ட கொலைகள் போதை மற்றும் கஞ்சா பழக்கத்தினால் நடந்துள்ளன. எனவே இளைஞர்களிடம் கஞ்சா பழக்கத்தை தடுக்கும் விதமாகவும் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவு தூத்துக்குடி மாநகரராட்சிக்குட்பட்ட கால்டுவெல் காலனி, எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், சத்யா நகர், 3 சென்ட் பகுதி மற்றும் மையவாடி பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்று கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்களிடம் விசாரித்தனர்

தெருமுனையில் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்த மாணவர்களிடம், படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் தெருவில் அமர்ந்து பேசுவதால், குழுச்சண்டை உருவாகும், அதனால் வாழ்க்கை வீணாகும் வீட்டுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கியதோடு, கஞ்சா விற்பனை குறித்தும் விசாரித்தார்

இருட்டுக்குள் இருசக்கரவாகனத்தில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை விசாரித்த பாலாஜி சரவணன், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும்படி அறிவுறுத்தினார்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனின் இந்த ரோந்து நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகளும், ரவுடிகளும் கலக்கமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments