கலிபோர்னியாவில் புயல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
வரும் நாட்களில் வானிலை மேலும் மோசமடையக் கூடும் என்றும், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்படக் கூடும் என்று தேசிய வானிலை சேவை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சியாரஸ் பகுதியில் ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை பனிப்பொழிவு இருக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் விழுந்ததால் சுமார் 60 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Comments