உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவி வழங்குகிறது அமெரிக்கா

0 1115

உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த ராணுவ உதவி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம் என்று கூறப்படும் நிலையில், ஹோவிட்சர்கள் எனப்படும் தானியங்கி பீரங்கிகள், கவச வாகனங்கள், மார்டர் எனப்படும் இலகு ரக பீரங்கிகளையும் வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதனுடன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் வழங்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. ஏற்கனவே இலகுரக பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக பிரான்ஸ் அறிவித்திருந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments