மொழியை காக்கும் கடமை அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாமல் எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும் - முதலமைச்சர்

0 776
மொழியை காப்பதற்கான கடமை அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாமல், எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மொழியை காப்பதற்கான கடமை அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாமல், எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46வது புத்தகக்காட்சியை துவக்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார்.

ஆயிரம் அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சி, வருகிற 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பின்னர் பேசிய முதலமைச்சர், சென்னையில் புத்தக பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதும் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

மேலும், மதுரையில் நூலகம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் திறக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments