அரசு பள்ளியில் எளிய முறை கற்றல் - கற்பித்தல் தொழில்நுட்பக் கல்வி முறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எளிய முறை கற்றல் - கற்பித்தல் தொழில்நுட்பக் கல்வி முறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எளிய முறை கற்றல் - கற்பித்தல் தொழில்நுட்பக் கல்வி முறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
எல்மோ என்ற தனியார் நிறுவனத்தின் காட்சிப்படுத்தும் சாதனம், வயர்லெஸ் டேப்லட் உள்ளிட்டவை மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன.
கற்றல் முறையை எளிமையாக்கி தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்ள வழிவகுக்கும் இந்த தொழில்நுட்பம், திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள 13 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
ஜப்பான் போன்று வகுப்பறைகளில் பலகை இல்லாமல், ஆசிரியர் கணினி நோட்பேட் மூலம் எழுதுவது பெரிய திரையில் தென்படும் வகையில் புதிய தொழில்நுட்ப முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
Comments