போலீசுக்கு தேள் கொட்டினா இப்படித்தான் இருக்கும் போல..! வாண்டடா கேஸ் வாங்குறாங்களாம்..! பணம் சார் பணம்...! பவர் சார் பவர்..!

0 3018

சென்னை திருவொற்றியூர் கடற்கரை சாலையில் லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் வசூல் செய்து கொண்டிருந்த உதவி ஆய்வாளர் ஒருவர், ஓட்டுநர்கள் வாண்டடாக வந்து வழக்கு வாங்கிச்செல்வதாக கூறி சமாளித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை திருவொற்றியூரில் கடற்கரை சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி வசூல் செய்வதை போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் சிலர் வழக்கமாக செய்து வருகின்றனர்.

இவர்கள் வண்டியின் ஆவணங்களை சோதனை செய்தோ, போக்குவரத்து விதிமீறலுக்காகவோ அபராதம் விதிப்பதில்லை.. இந்த சந்திப்பில் போக்குவரத்து தலைமைகாவலர் மறித்ததும், சாலையிலேயே லாரிகளை நிறுத்தி விட்டு ஓட்டுநர்களை மட்டும் ஆபீஸ் ரூமுக்கு அனுப்பி வைப்பார்.

அங்கிருக்கும் உதவி ஆய்வாளர் ஆளுக்கு ஏற்றாற்போல 50 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை வலுக்காட்டாயமாக வசூலில் ஈடுபடுவதாகவும், பில் ஏதும் கொடுப்பதில்லை என்றும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக அங்கிருந்த காவலரிடம் கேட்டபோது, லாரிகளை நிறுத்துவது குறித்து தனக்கு தெரியாது உள்ளே இருக்கும் அய்யாவிடம் கேளுங்கள் என்றார். உள்ளே இருந்து அபராத மிஷினை ஆன் செய்தபடியே வெளியே வந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பொன்.குமார், தான் லாரிகளை நிறுத்த சொல்லவில்லை என்றும், லாரி ஓட்டுநர்கள், அவர்களாகவே வாண்டடாக வந்து வழக்கு வாங்கி அபராதம் கட்டிச் செல்வதற்காக வந்திருக்கிறார்கள் என்றும் சொல்ல, லாரி ஓட்டுநரோ போலீஸ் தான் லாரியை நிறுத்தி வரவைத்ததாக தெரிவித்தார்.

இந்த லாரிகளுக்கு என்ன வழக்கின் கீழ் அபராதம் போடூவீர்கள்.? என்று கேட்டதற்கும் அவரிடம் தகுந்த பதில் இல்லை.. சமாளிப்பே பதிலாக வந்தது.

அவர்களின் செயலால் அந்த சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலுடன் , விபத்து நிகழும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டியதும், தன் தவறை ஒப்புக் கொண்ட அந்த காவல் உதவி ஆய்வாளர் அங்கிருந்த ஓட்டுநர்களை லாரிகளை எடுத்துச்செல்லும்படி கூறினார்.

போக்குவரத்தை சரி செய்து, விபத்துக்கள் இன்றி மக்கள் பயணிக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல், இப்படி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு காரணமே இல்லாமல் லாரி ஓட்டுநர்களை வரவைத்து பணம் வசூலிப்பதில் ஆர்வம் காட்டும் வசூல் ஆபீசர்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments