மாதம் ரூ.500 செலுத்தினால், 10 மாதத்தில் 2 கிராம் தங்கம் தருவதாகக் கூறி மோசடி.. முதலமைச்சர் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்..!

செய்யாறு பகுதியில், மாதம் 500 ரூபாய் செலுத்தினால் 10வது மாதத்தின் இறுதியில் 2 கிராம் தங்கம் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தனிப்பிரிவில் புகாரளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த மொய்தீன் என்பவர் வி.ஆர்.எஸ் என்ற நிதி நிறுவனம் மூலம் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வசூல் செய்து, அதற்குரிய பொருட்கள் வழங்காமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
பணம் வசூல் செய்து கொடுத்து ஏமாந்த ஏஜெண்ட்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகம் வந்து புகாரளித்து, பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments