அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததால் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த உறவினர்கள்..!

0 1861

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உறவினர்கள் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

சாலவேடு கிராமத்தில் உள்ள பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் பரணி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இரவு நேரத்தில் வாட்ஸப் வீடியோ கால் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையறிந்து ஆத்திரமடைந்த பெற்றோர் ஆசிரியர் பரணி மீது நடவடிக்கை எடுக்ககோரி பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் பரணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments