சேலத்தில் தனியார் பேருந்தை தடுத்து நிறுத்தி நடத்துனரை தாக்கிய கும்பல் கைது..!

சேலத்தில் தனியார் பேருந்தை நிறுத்தி நடத்துனரை தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வந்த பேருந்தில் பயணித்த மாதங்கிதாசன் என்பவரை இருக்கை மாறி உட்காரும்படி நடத்துனர் கூறியுள்ளார்.
இதற்கு அவர் மறுத்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாதங்கிதாசன்தனது கூட்டாளிகளுடன் வந்து சேலம் மணல்மேடு பகுதியில் பேருந்தை தடுத்து நிறுத்தி நடத்துனரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இது குறித்து நடத்துனர் அளித்த புகாரின் பேரில் பேருந்தில் பதிவான சிசிடிவி காட்சியினை அடிப்படையாக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
Comments