ஜெயின் புனித தலத்தை சுற்றுலா தளமாக மாற்ற ஜார்க்கண்ட் அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயின் சமூகத்தினர் பேரணி..!

0 1284

ஜார்க்கண்டில் உள்ள ஜெயின் புனித தலமான சிக்கர்ஜி-யை, சுற்றுலா தளமாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்ததைக் கண்டித்து, சென்னையில் ஜெயின் சமூகத்தினர் பேரணி நடத்தினர்.

ஜார்க்கண்ட் அரசின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றதால், சிக்கர்ஜி புனித தலத்தை, சுற்றுலா தளமாக மாற்றும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க, மத்திய அரசு, நீதிமன்ற தடை உத்தரவு பெற்று நேற்று அறிவித்தது.

இருப்பினும், மாநில அரசுகள் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தி சிந்தாதிரிப்பேட்டை முதல் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் வரை ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக சென்றனர்.

காஞ்சிபுரத்தில் ஜெயின் சமூகத்தினர் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதுச்சேரியிலும் ஜெயின் சமூகத்தினரின் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments