அதிகாரிகளை ஒருமையில் திட்டிய ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் தொடர் விடுப்பில் சென்றதால் கூடுதல் பொறுப்பேற்ற திட்ட அலுவலர்..!

0 1168

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ஊத்துக்காட்டில் இருளர் இன மக்களுக்காக கட்டப்படும் குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதை கண்டித்த ஊரக முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி தொடர் விடுமுறையில் சென்றதையடுத்து, மாவட்ட வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் கவிதா, கூடுதல் பொறுப்பேற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், இருளர் - பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடியிருப்புகள் கட்டு பணியை தரமற்ற முறையில் மேற்கொண்டதாக கூறி, தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி கடுமையாக கண்டித்தார்.

இந்நிலையில் தவறை சுட்டிக்காட்டிய திட்ட இயக்குனர், ஒருமையில் பேசியதாக கூறி அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, ஸ்ரீதேவி விடுப்பில் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments