டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல் - குழப்பம்.. ஆம் ஆத்மி - பாஜக இடையே மோதல்

0 764
டெல்லி மாநகராட்சி கூட்டத்தில், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் தொடர்பாக, ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்கள் மோதிக்கொண்டனர்.

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் தொடர்பாக, ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்கள் மோதிக்கொண்டனர்.

மாநகராட்சி தேர்தலுக்கு பின் நடைபெற்ற கூட்டத்தில், நியமன உறுப்பினர்களுக்கு, துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட தற்காலிக சபாநாயகர் சத்யா சர்மா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதுதொடர்பாகவும், தேர்தல் நடத்தும் அதிகாரியாக பாஜக கவுன்சிலர் நியமிக்கப்பட்டது தொடர்பாகவும், ஆம் ஆத்மி - பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

துணை நிலை ஆளுநர் சக்சேனா, டெல்லி அரசிடம் கலந்தாலோசிக்காமல் பல்வேறு நியமனங்களை மேற்கொள்வதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments