சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
தமிழ்நாட்டில், விதிகளுக்கு உட்பட்டே குவாரிகளுக்கு அனுமதி - துரைமுருகன் விளக்கம்

உச்சநீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றியே தமிழ்நாட்டில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றியே தமிழ்நாட்டில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காப்புக் காடுகளுக்கு அருகில் குவாரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வழித்தடங்கள் ஆகியவற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் குவாரி பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளத் தடை தற்போதும் நீடிப்பதாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். காப்பு காடுகளுக்கான பாதுகாப்பு இடைவெளியும் பின்பற்றப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments