மார்கழி திருவாதிரை திருவிழாவை ஒட்டி, சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்..!

மார்கழி திருவாதிரை திருவிழாவை ஒட்டி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், நடராஜ பெருமானின் வீதி உலா நடைபெற்றதைத் தொடர்ந்து, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், திருத்தணி வடாரண்யேஸ்வரர் கோவில்களிலும் விடிய விடிய நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
இதே போல, சுசீந்திரம் தாணுமாலிய சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்,
திருவாரூர் தியாகராஜர் கோவில், கம்பம் காசி விஸ்வநாதர் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்ற நிலையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments